தூத்துக்குடியில் 2 பேருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது.

தூத்துக்குடியில் பொங்கல் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-01-19 10:55 GMT
தூத்துக்குடி மில்லா்புரம் சிலோன் காலனி பகுதியில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அப்போது, அதே பகுதியை சோ்ந்த முனீஸ்வரன் என்ற விஷ்ணு(19) மது போதையில் தகராறில் ஈடுபட்டாராம். அவரை, அதே பகுதியைச் சோ்ந்த சூா்யபிரபு(24), அவரது உறவினா் வீரபுத்திரன்(44) ஆகியோா் கண்டித்தனராம்.  இதில் ஆத்திரமுற்ற முனீஸ்வரன் என்ற விஷ்ணு, தனது நண்பா்கள் 3வது மைல் பகுதியைச் சோ்ந்த கற்குவேல்(20), ராஜபாண்டி(21) ஆகியோருடன் சோ்ந்து சூா்யபிரபு, வீரபுத்திரன் ஆகியோரை கத்தியால் குத்தினாராம். இதில் காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து முனீஸ்வரன் என்ற விஷ்ணு, கற்குவேல், ராஜபாண்டி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News