3 பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக் சோ சட்டத்தில் கைது..*
3 பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக் சோ சட்டத்தில் கைது..*;
விருதுநகரில் 3 பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக் சோ சட்டத்தில் கைது.. விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 3 மாணவர் களுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வுடன் இருப்பதை அறிந்த ஆசிரியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது விசாரணையில் கடந்த தை பொங்கலுக்கு நீண்ட நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நாங்கள் மூன்று பேரும் தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, ஆமத்தூர் நடுத்தெருவை சேர்ந்த மாவு விற்பனை செய்து வரும் அழகர்சாமி என்பவர் எங்கள் மூன்று பேருக்கும் திண்பண்டங்கள் மற்றும் பணம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் எங்களை மிரட்டியதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்து மாணவரிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் மாணவர்களிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த அழகர்சாமி மீது புகார் அளித்ததின் பேரில் ஆமத்தூர் போலீசார் அழகர்சாமியை கைது செய்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்