தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சத்தியமங்கலம், புளியம்பட்டி, திங்களூர், கவுந்தப்பாடி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா ஆகியவற்றை விற்பனை செய்ததாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பழைய மார்க்கெட், பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் (45), புளியம்பட்டி, எரக்காட்டு பாளையம், அண்ணாமலையார் கோயில் வீதியைச் சேர்ந்த சின்னசாமி (65), கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (58), திங்களூர், காளியம்மன் கோயில் வீதி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா (41)ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 720 கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.