வனத்துறையினர் எனக்கூறி காப்பு காட்டில் நகை, பைக் பறிப்பு - 5 பேர் கைது

Update: 2023-11-14 06:18 GMT
கைது
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி பகுதியை சேர்ந்தவர் மணிராஜ், 25; இவர் கடந்த 1ம் தேதி தனது உறவுக்கார பெண்ணுடன் அஜீஸ் நகர் காப்புக் காடு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வனத்துறை அதிகாரிகள் எனக் கூறி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 2 சவரன் செயின், மோதிரம் மற்றும, கொலுசு ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடினர். அதேபோல் சாத்தனுார் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாரிடம், கடந்த 12ம் தேதி பைக்கை பறித்து சென்றனர். இது குறித்த புகார்களின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து காப்புகாட்டு பகுதியில் சுற்றித் திரிந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள் கடலுார் மாவட்டம், சிறுவம்பார் பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் தீபக், 29; காட்டுபரூர் வெங்கடேசன் மகன் மகேஸ்வரன், 21; கோபால் மகன் சக்திவேல், 40; விருத்தாசலம் அடுத்த மாணிக்கவாசகர் நகர் சுப்ரமணியன் மகன் மணிகண்டன், 23; நாச்சியார்பேட்டை ராமமூர்த்தி மகன் சங்கர், 34; ஆகியோர் என தெரியவந்தது. மேலும். வனத்துறை அதிகாரிகள் எனக்கூறி நகை, பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News