குமரியில் 5.38 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
குமரியில் 5.38 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 57 ஆயிரத்து 915 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை தொடங்கி மாலை வரை வாக்கு பதிவுகள் நடைபெற்றது.
இதில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 168298 வாக்குகள் 63.29% ; கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி 155328 வாக்குகள் 62.93% ; கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 205931 வாக்குகள் 69.59% ; குளச்சல் சட்டமன்ற தொகுதி 172684 வாக்குகள் 64.05% ; விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 155494 வாக்குகள் 65.40% ;
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி 162017 வாக்குகள் 66.98% என மாவட்ட அளவில் மொத்தம் 65. 46 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த வகையில் இந்த வகையில் மாவட்ட முழுவதும் 5,38,162 வாக்காளர்கள் நேற்றைய தினம் வாக்களிக்கவில்லை தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விழிப்புணர்வு நடக்கலை மேற்கொண்ட போதிலும் வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வ காட்டாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.