6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

கஞ்சா தாரளமாக கிடைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு;

Update: 2025-01-21 16:10 GMT
பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூர் கீழத் தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் வீரராகவன் (25).பட்டதாரி. இவர் நேற்றிரவு அதே கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருக்கும் போது மது போதையில் வந்து சிறுமியிடம் பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற போது வலியால் சிறுமி அலறி சத்தம் போட்டுள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாயார், அந்த சிறுமியை மீட்டதோடு, தட்டிக் கேட்ட போது, கட்டையால் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளான். இதை பார்த்து பொறுக்க முடியாத பொதுமக்கள் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மங்கலமேடு உடனடியாக போதையில் இருந்த வீரராகவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரைணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கஞ்சா போதையில், கத்தியை எடுத்துக் கொண்டு வீதிவீதியாக வந்து பொதுமக்களை மிரட்டுவதோடு, தெருவிளக்குகளை உடைப்பதாகவும், மேலும், பெண்கள் இருக்கும் வீடுகளை நோட்டமிடுவதாகவும், பெண்கள் நிம்மதியாக வீடுகளில் இருக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.போலீசார் இரும்புக் கரம் கொண்டு அடக்குவதோடு, அப்பகுதி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், அகரம்சீகூர், திட்டக்குடி பார்டர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை தடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கலெக்டர், போலீஸ் எஸ்.பிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News