கணவரை வெட்டிய மனைவி உட்பட 8 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்
அஞ்சு கிராமம் அருகே குடும்ப தகராறில் கணவரை வெட்டிய மனைவி உட்பட 8 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Update: 2024-01-05 03:48 GMT
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஜேம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர் ஏசுஅமலதாசன் (42). அஞ்சுகிராமம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர். இவரது மனைவி அன்னாள் ரெஜி(38). குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் தாயார் வீட்டுக்கு சென்றார். அப்போது கடந்த 20-12-2009 அன்று ஏசுஅமலதாசன் மற்றும் அவரது சகோதரி சென்சலின் இருவரும் அன்னாள் ரெஜியை அழைத்து வருவதற்காக சென்றனர். அப்போது அன்னாள் ரெஜியின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த அந்தோணி(25), ஜெமீன்(25),ஜெகதீஸ்(21), ரஜகிருஷ்ணபுரத்தை சேர்ந்த சீனிவாசன்(21), ஜெகன்(27), ரஞ்சிதம்(35) மற்றும் அன்னாள் ரெஜி, அந்தோணி, ஜெமீன் உள்பட 8 பேர் சேர்ந்து ஏசுஅமலதாசனை தாக்கி அரிவாளால் வெட்டினர். இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணகுமார் குற்றவாளிகளான அன்னாள் ரெஜி, அந்தோணி, ஜெமீன் உள்பட 7 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் செந்தில்மூர்த்தி ஆஜரானார்.