81 கிலோ புகையிலை பொருட்களுடன் இருவர் கைது
மதுரை அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள பள்ளப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கடைகளை சோதனை செய்தனர் .அப்போது, அங்கு சட்டவிரோதமாக 81 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, தாஜுதீன் (54), பகுர்தீன் (26) ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.