சங்கரன்கோவில் அருகே அரிவாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
அரிவாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது;
Update: 2024-06-01 08:06 GMT
அரிவாளுடன் சுற்றித்திரிந்த நபர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே குலசேகரமங்கலம் சேர்ந்தவர் வேலுச்சாமி என்பவர் சேந்தமரம் பேருந்து நிறுத்தம் அருகே கையில் அரிவாளுடன் நின்று கொண்டு அவரின் உறவினருடன் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அரிவாள் வைத்து மிரட்டும் தொனியில் அவர் கடுமையாக பேசியுள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் சேர்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர், இதுகுறித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .