உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க அறிக்கை
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை;
By : King 24x7 Website
Update: 2023-12-31 03:01 GMT
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி அறிக்கை
தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில், விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த பயிர்கள், உடமைகள் மற்றும் கால்நடைகளை இழந்து வாடிக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது மத்திய அரசும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் நிதி சம்பந்தமாக அரசியல் நாடகம் நடத்துவது தீ பட்ட காயத்தில் தேள் கொட்டுவது போல் வேதனைக்கூறிய செயலாக உள்ளது. என்றும் செய்தியாளர்கள் இடத்தில் மேலும் பேசிய உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத்தலைவர் R.வேலுசாமி. கர்நாடகா அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட டிசம்பர் 31 ந் தேதியுடன் முடிவடைகிறது உடனடியாக கர்நாடகா அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு உண்டான காவிரி தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் R.வேலுசாமி வலியுறுத்தியுள்ளார்.