பல்லடம் அருகே பழைய இரும்பு குடோனில் திடீர் தீ விபத்து
பல்லடம் அருகே பழைய இரும்பு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரம் கிராம பகுதியில் உள்ள கே.பி.கார்டன் பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இந்நிலையில் மதியம் திடீரென அருகில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த குடோனில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் வானுயர கரும்புகையுடன் தீ மள மளவென பற்றி எரிய ஆரம்பித்தது.
இதனிடையே குடோனில் வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்காமல் இது போன்று தாங்களே விபரீதமாக தீயை அணைக்க முயன்றதை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் கேட்டபோது பதில் கூறாமல் சென்றுவிட்டனர்.
மேலும் சுமார் ஒன்னரை மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரிந்த தீயில் பிளாஸ்டிக் பொருட்கள் கட்டிடம் சேதம் அடைந்தது.