லத்தேரி பகுதியில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
லத்தேரி பகுதியில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 13:09 GMT
கோப்பு படம்
கே வி குப்பம் கொத்தமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்இவரது மகன் செல்வம் வயது 31 இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை இந்நிலையில் லத்தேரி பகுதியில் அந்த வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரயிலில் அடிபட்டு உயிர் இழந்த வாலிபரின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும்இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்