திருப்பத்தூரில் நடிகர் விஜய் பற்றி கவிதையை எழுதி உலக சாதனை படைத்த வாலிபர்
திருப்பத்தூரில் நடிகர் விஜய் பற்றி 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய முழு கவிதையை எழுதி உலக சாதனை படைத்த வாலிபர்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்து தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு பல்வேறு திரையரங்குகளில் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட்டது.
திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கதிர் வயது (30) விஜயின் தீவிர ரசிகருமான இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இயங்கி வரும் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை நிறுவனம் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் தனியார் நிறுவனத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலையில் கடந்த 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கி மறுநாள் 17ஆம் தேதி இரவு 11 மணி வரை மொத்தம் 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழு கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் திருப்பத்தூர் திருவண்ணாமலை சாலையில் உள்ள சிகேசி திரையரங்கில் இன்று கில்லி திரைப்படம் திரையிடப்பட்டதை தொடர்ந்து உலக சாதனைபடைத்த கதிர்வேல் இரண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜயின் ரசிகர் மன்ற பொறுப்பாளர் நவீன் குமார் மற்றும் உறவினர்கள் ரசிகர்கள் உடன் இருந்தனர்.