எருதாட்டத்தில் மாடு முட்டி வாலிபர் படுகாயம்
சேலம் அருகே எருதாட்டத்தில் மாடு முட்டி வாலிபர் படுகாயடைந்தார்.;
Update: 2024-01-19 13:23 GMT
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் எருதாட்ட நிகழ்ச்சியின் போது அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 25) என்ற வாலிபர் மாட்டின் அருகே சென்றார். அப்போது அவரை மாடு முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.