ஆத்தூர் : தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

ஆத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் கார் ,வேன் ,இருசக்கர வாகனங்களில் தேர்தல் விதிமுறைகளை பின் பற்றாமல் பணம்,பொருட்கள் எடுத்துச் செல்கின்றனரா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

Update: 2024-03-19 07:57 GMT

வாகன சோதனை 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கார், வேன், இருசக்கர வாகனங்களில் சோதனை நடத்தி பணம், பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா என தீவிர சோதனை நடத்தினர்.
Tags:    

Similar News