வெளிநாடுகளில் பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி பயில உதவி தொகை
வெளிநாடுகளில் முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை தொடரும் பழங்குடியின மாணவ மாணவியர்ள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார்.
Update: 2024-05-30 03:22 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் உயர்படிப்புக்கான கல்வி உதவித்தொகை ஒன்றிய அரசின் அறிவிப்பின் படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி(PHD) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் வகுப்பு மாணவ மாணவியர்ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் வகுப்பு மாணவ மாணவியர்கள் http://overseas.tribal.gov.in/ . விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்:31.05.2024. ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.