அதிமுக பிரமுகர் இல்ல திருமணம் - மணமக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி
Update: 2023-11-01 03:12 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபெற்ற அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம் மகள் திருமண வரவேற்பு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு மணமக்கள் சஞ்சய்குமார் - சௌபர்ணிகா ஆகியோரை வாழ்த்தினார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி. சண்முகம், கேபி. அன்பழகன், சரோஜா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.டி. ராஜேந்திர பாலாஜி, கேசி. கருப்பண்ணன், காமராஜ், எம்ஆர். விஜயபாஸ்கர், கே பி. முனுசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், கே பி ராமலிங்கம்,சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், மணி, பாலசுப்பிரமணியன், ராஜமுத்து, ஜெய்சங்கரன், நல்லதம்பி, கோவிந்தசாமி, ஜெயக்குமார், சம்பத்குமார் மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் சிவகுமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.