எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு
திருவள்ளூர் வழியாக நேற்று திருப்பதி சென்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர் ரமணா தலைமையில் அதிமுக உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
Update: 2024-01-31 14:19 GMT
வரவேற்பு
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி திருவள்ளூர் திருத்தணி வழியாக திருப்பதிக்கு புறப்பட்டார். பொது செயலாளருக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா தலைமையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே திருப்பதிக்கு செல்லும் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது வீரராகவர் கோயில் சார்பில் மரியாதையும் செய்தனர். இதில் ஆயிரத்திற்கம் மேற்பட்டோர் வரவேற்பு அளித்தனர். அதிமுக தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி க்கு மாலை அணிவித்து புத்தகங்களை வழங்கி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.