மக்காச்சோள மகசூல் குறைவு: வேளாண்அலுவலர்கள் ஆய்வு

மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

Update: 2023-12-15 08:42 GMT

மக்காச்சோள மகசூல் குறைவு வேளாண் அலுவலர்கள் ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் வட்டாரத்தில் நோய்த்தாக்கிய மக்காச்சோளப் பயிர்களை ஆய்வு செய்யும் வேளாண்மை துறை அலுவலர்கள் மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, மகசூல்குறைவுக்கான காரணம் குறித்து தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த பயிர்கள் நோய்த் தாக்குதலால் கருகியதை யடுத்து, தொழில்நுட்பரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சி யரிடம் விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். இந்த நிலையில் லத்துவாடி,கிழக்கு ராஜாபாளையம், பின்னனூர், சுவர்ப்பனை, பாகடப்பாடி, புளியங்குறிச்சி ஊராட்சிகளில் வேளாண்மை இயக்கு நர்சிங்காரம், மாநிலத் திட்டம் கமலம், விதை ஆய்வு செல்வமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நீலாம்பாள், தலைவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா, துணை வேளாண்மை அலுவலர் மணவழகன், வேளாண்மைவிதை ஆய்வு அலுவலர் ரவிக்குமார், வட்டாட்சியர் பாலசுப்ரமணி, கிராமநிர்வாக அலுவலர் சரண்யா ஆகியோர் சாகுபடி செய்தபகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.வயல்ஆய்வின் போது உதவி வேளாண்மை அலுவலர்கள் சுப்பிரமணியன், ரவிக்குமார்.பிரகாஷ், கார்த்திக், ஆத்மா தொழில்நுட்பமேலாளர் சக்தி, உதவிநுட்ப மேலாளர் ரமேஷ், முத்துவேல் மக்காச்சோளத்திற்கு அடி உர உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மாகசோளம் வேப்பம் புண்ணாக்குஇடுதல், வரப்புபயிராக உளுந்து சாகு படிசெயதல், இனகவர்ச்சிபொறி வைத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க விவசாயிகளுக்கு அறிவு றுத்தப்பட்டது. மேலும், வேப்பம் எண்ணெய் கரைசல், எம்மா மெடிக்டின் பென்சோயேட், டெலிகேட் ஆகிய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News