சாம்பவர்வடகரையில் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
Update: 2023-11-26 01:14 GMT
சடலத்தை கைப்பற்றி விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை மேலூர் உலைக்கூட தெருவை சேர்ந்தவர் வேல். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (65). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.