போதை பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

எடப்பாடி அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் போதை பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

Update: 2024-01-24 10:44 GMT

எடப்பாடி அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் போதை பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சென்றனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு பேரணி எடப்பாடி பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது. இதனை எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.. இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயசித்ரா மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு போதை பொருளுக்கு எதிரான வாசங்கள் ஏந்திய பதாய்களுடன் முக்கிய வீதி வழியாக கோஷங்களிட்டு வாரு சென்றடைந்தனர்.
Tags:    

Similar News