சேலத்தில் கட்டிட மேஸ்திரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
Update: 2023-11-28 04:21 GMT
ஆலோசனை கூட்டம்
சேலம் கட்டிட மேஸ்திரி அசோசியேஷன் அவசர கூட்டம் பெங்களூரு பைபாஸ் இந்திரா நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்துக்கு அசோசியேஷன் தலைவர் மந்திரி தலைமை தாங்கினார். பொருளாளர் கோவிந்தன், துரைசாமி, தியாகராஜன், சேகர், ராமசாமி, குமார், முருகன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்த அசோசியேஷன் செயலாளர் சீனிவாசன் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாளை (புதன்கிழமை) அவரது வீட்டுக்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அசோசியேஷனை சேர்ந்த ரவி சம்பத், முருகேசன், மாணிக்கம், முரளி, முருகன், சகாதேவன், சீனிவாசன், ராதாகிருஷ்ணன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.