ஆயுஷ்மான் விஸ்வகர்மா யோஜனா கடன் முகாம்

Update: 2023-11-06 13:11 GMT
மத்திய அரசின் ஆயுஷ்மான் விஸ்வகர்மா யோஜனா கடன் வசதி திட்ட பதிவு முகாம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் மத்திய அரசின் பாரத் மருத்துவ காப்பீடு திட்ட விஸ்வகர்மா யோஜனா கடன் வசதி திட்டம் பதிவு முகாம் நடந்தது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி வடக் கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்ட விஸ்வகர்மா யோஜனா கடன் வசதி திட்டம் பதிவு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இம்முகாமில் ஆரணி வடக்கு மண்டல தலைவர் குணாநிதி, தெற்கு மண்டல பிரபாரி சேட்டுஜி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் சைதை சங்கர், ஆரணி வடக்கு மண்டல தலைவர் குணாநிதி, மாவட்ட தலைவர் கார்த்திக், மத்திய அரசு பிரிவு மாவட்ட செயலாளர் வேல்முருகன், துணை தலைவர் அருள்ராஜாமாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன், வேலு, சரவணன், முருகன் மற்றும் ஆதனூர் கிராம சேர்த்த நிர்வாகிகள், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News