இந்திய அளவில் பாஜக 200 தொகுதிகளை தாண்டாது - மாணிக்கம்தாகூர்

இந்தியா கூட்டணி தமிழகம் மட்டுமின்றி அகில இந்திய அளவில் 300 இடங்களுக்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது. அகில இந்திய அளவில் பாஜக 200 இடங்களுக்கு கீழே செல்லும். மக்களை திசை திருப்புவதற்காகவே குடியுரிமை திருத்தச்சட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.;

Update: 2024-03-12 02:37 GMT
 மாணிக்கம் தாகூர் எம்.பி 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி 45 வது வார்டு பகுதியில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.18 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் அமைக்கும் பணிக்கு மாணிக்கம் தாகூர் எம்பி அடிக்கல் நாட்டினார்.விழாவில் மேயர் சங்கீதா,துணை மேயர் விக்னேஷ் பிரியா, கவுன்சிலர்கள் ரவிசங்கர், தங்கப்பாண்டியம்மாள், தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தை தவிர தமிழகம், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களிலும் இண்டியா கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜி மனம் இறங்கி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இண்டியா கூட்டணி தமிழக மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் வெற்றி பெற்று 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும்.

Advertisement

தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது. அகில இந்திய அளவில் பாஜக 200 இடங்களுக்கு கீழே செல்லும். மக்களை திசை திருப்புவதற்காகவே குடியுரிமை திருத்தச்சட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. பாஜக அரசு இருக்கும் வரை பட்டாசு தொழிலுக்கான பிரச்சனைகள் தொடரும். பட்டாசு ஏற்றுமதிக்கு பாஜக அரசு தடை விதித்துள்ளது. இண்டியா கூட்டணி அரசு அமைந்த உடன் பட்டாசு ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் சீனாவுக்கு போட்டியாக சிவகாசி பட்டாசு தொழில் வளர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும். பட்டாசு விபத்து, வெள்ள பாதிப்புகளுக்கு வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் வர இருப்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு அவர் எந்த நன்மையும் செய்யப் போவதில்லை, என்றார்.

Tags:    

Similar News