மானாமதுரையில் அக்காவை கொலை செய்த தம்பி - போலீசார் விசாரணை

Update: 2023-11-21 01:41 GMT

கண்ணன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகள் தேவயானி வயது (23) பி.எட் முடித்துள்ளார். இவருடைய தம்பி கண்ணன் படித்து முடித்துவிட்டு தனது தந்தையின் கறிக்கடையில் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்குள் தேவயானி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். மகள் இறந்து கிடப்பதை பார்த்த குடும்பதினர் போலீசில் தகவல் கொடுத்த நிலையில் கொலை செய்த தம்பி கண்ணன் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்ற அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காவை தம்பி கழுத்து அறுத்து கொன்ற சம்பவம் மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News