வேட்பாளர்கள் ஜூலை 1 இல் தேர்தல் செலவின கணக்கு தாக்கல்

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முழுமையான தேர்தல் செலவின கணக்குகளை ஜூலை.1 இல் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-29 05:17 GMT

வேட்பாளர்கள் ஜூலை 1 இல் தேர்தல் செலவின கணக்கு தாக்கல்

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது முழுமையான தேர்தல் செலவின கணக்குகளை ஜூலை.1 இல் தாக்கல் செய்ய உள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலை (2024) முன்னிட்டு மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும்  பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கிய தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது முழுமையான தேர்தல் செலவின கணக்கு விபரங்களை வரும் ஜூலை 01 ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில்  தேர்தல் செலவின மேற்பார்வையாளர் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  தரைதள அறை எண் 1-இல் தாக்கல் செய்ய உள்ளனர். வேட்பாளர் வாரியாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் செலவினக் கணக்கு விபரங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News