சி.பி.ஐ. சார்பில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஊழியர் கூட்டம்
குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஊழியர் கூட்டம் நடந்தது.
By : King 24x7 Website
Update: 2024-04-08 05:15 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஊழியர் கூட்டம் நடந்தது. ஏப். 19ல் லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் பிரகாஷ், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார். குமாரபாளையம் வடக்கு, தெற்கு, பொறுப்பாளர்கள் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்து ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தனர். கூட்டணி கட்சியினரும் உடன் சென்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோடு தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரகாஷ்க்கு அதரவு திரட்டும் வகையில், ஊழியர் கூட்டம் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் நடந்தது. கட்சி தலைமை அறிவித்த வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட கேட்டுக்கொள்ளுதல், தி.மு.க. ஆட்சி சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தல், சுவர் விளம்பரம் எழுதுதல், வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி, வாக்காளர் பட்டியலில் உள்ளபடி, வாக்காளர்கள் அதே வீட்டில் உள்ளார்களா? அந்த வீட்டு பெண், திருமணமாகி சென்று விட்டாரா? மகன், மகள், உயர் கல்வி கற்க, அல்லது பணிக்கு வெளியூர் சென்றுவிட்டார்களா? என்பது உள்ளிட்ட விபரங்கள் சேகரித்து, வெளியூரில் இருப்பவர்கள் வசம் தேர்தல் நாளில் வந்து விட கேட்டுக்கொள்ளுதல், பூத் சிலிப் வழங்கப்பட்டதா? என உறுதி படுத்திக்கொள்ளுதல் ஆகியன குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினர். இதில் சி.பி.ஐ. மாவட்ட துணை செயலர் கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாக குழு உறுபினர் தி.மு.க., சி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.