முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - எம்பி, எம்எல்ஏ ஆய்வு

Update: 2023-11-01 04:06 GMT

ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை சரியான முறையில் குழந்தைகளுக்கு வழங்குகிறார்களா என்பதை அண்ணாதுரை, எம்பி .சரவணன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அண்ணாதுரை, எம்பி கூறுகையில், தமிழக அரசு அறிவித்த இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை மாணவர்களுக்கு சரியான முறையில் கிடைக்கிறதா மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளும் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அனைத்து அமைச்சர்களுக்கும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்து இதேபோல் அனைத்து தொகுதியிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை குழந்தைகளுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா அதுவும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா அதேபோல் உணவுகள் அனைத்தும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய கூறியிருந்தார் . அதன் அடிப்படையில் சரவணன், எம்எல்ஏவும் நானும் கலசபாக்கம் அடுத்த அருணகிரிமங்கலத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை சரியான முறையில் வழங்கப்படுகிறதா அதேபோல் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் தரமாகவும் சத்தாகவும் இருக்கிறதா என்பதையும் அதேபோல் சரியான நேரத்திலும் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து பின்னர் குழந்தைகளுக்கு வழங்கும் உணவை ஆய்வு செய்து சரி யான முறையில் சுவையாக உள்ளதா என்பதில் ஆய்வு செய்தோம். என்றார் இந்த நிகழ்ச்சியில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அ.சிவகுமார்,வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஆணையாளர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) முருகன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா,ஒன்றிய குழு உறுப்பினர் கலையரசி துரை, மாவட்டபிரதிநிதிகள் ராஜசேகர்,முருகையன், அறங்காவலர்குழு தலைவர் ராமன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்கலந்து கொண்டனர்

Tags:    

Similar News