அரவக்குறிச்சி அருகே காரும்- ஆம்னி வேனும் மோதல்: 4பேர் படுகாயம்

அரவக்குறிச்சி அருகே காரும்- ஆம்னி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-04-25 13:35 GMT

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வெஞ்சமாங் கூடலூர் அருகே உள்ள வரிக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 45. இவரது மனைவி அன்னலட்சுமி வயது 31. இவர்களது மகன் கௌஷிக் வயது 16, மகள் ஞானஸ்ரீ வயது 7-. இவர்கள் அனைவரும் இவர்களுக்கு சொந்தமான ஆம்னி வேனில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில், கரூரிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்த ஆம்னி வேனை அதே பகுதியைச் சேர்ந்த தனபாலன் வயது 27 என்பவர் ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் புத்தாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில், கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் பாலாஜி வயது 41 என்பவர் மது போதையில் ஓட்டி வந்த கார் தனபாலன் ஓட்டிச் சென்ற ஆம்னி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் ஆம்னி வேன் டிரைவர் தனபாலன், ஆம்னி வேனில் பயணித்த அன்னலட்சுமி கௌஷிக் மற்றும் ஞான ஸ்ரீ ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்பட காரணமான பாலாஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News