பேருந்துகள் அதிவேகமாக சென்று அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்துவதாக புகார்

உசிலம்பட்டி போக்குவரத்து ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-28 09:27 GMT

ஆய்வு செய்த போது 

உசிலம்பட்டி பகுதியில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக சென்று அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போக்குவரத்து ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியாக உள்ளது.

இந்த உசிலம்பட்டி வழியாக மதுரை மற்றும் தேனி செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதுடன், அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தியும் வந்தன. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் உசிலம்பட்டி போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்கள் மதுரை மற்றும் தேனியிலிருந்து வந்த தனியார் பேருந்துகளை இடைமறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஆவணங்கள் சரியாக உள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா என போக்குவரத்து ஆய்வாளர் ஒவ்வொரு தனியார் பேருந்திலும் ஏறி சோதனை நடத்தினார். தொடர்ந்து அதிவேகமாக இயக்கி வந்த தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்ததுடன், எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News