தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை: தாரகை கட்பட் பேட்டி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என களியக்காவிளையில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் நேற்று குமரி மாவட்டம் வருகை தந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட்டிற்கு தமிழக கேரள கேரள எல்லையான களியக்காவிளையில் காங்கிரசார் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தாரகை கட்பட் கூறியதாவது. கள்ளக்குறிச்சி சம்பவம் நடக்க கூடாத மோசமான சம்பவம் காங்கிரஸ் , கூட்டணி கட்சி முதல்வர் உட்பட அனைவரும் துயரமான சம்பவமாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெளிவாக கூறி இருக்கிறார் அதிமுக ஆட்சியிலும் அங்கு கள்ளசாராயம் காய்ச்சி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் காங்கிரஸ் கொள்கை பூரண மதுவிலக்கு ஆனால் அரசு உடனடியாக மதுவிலக்கை கொண்டுவந்தால் பக்கத்தில் இருக்கும் கேரளாவில் போய் மது பிரியர்கள் வாங்குவார்கள் பாண்டிச்சேரியில் போய் மது வாங்குவார்கள் இதனால் அண்டை மாநிலங்களுக்கு வருவாய் கூடும் நான் அதற்காக நியபடுத்தவில்லை கொஞ்சம் கொஞ்சமாக மது கடைகளை மூட தமிழக அரசிடம் திட்டம் இருக்கிறது காங்கிரஸ் கள்ளுகடைகளை திறக்க கேட்டிருக்கிறோம் பூரண மது விலக்கு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை .
அண்ணாமலை சொல்வதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரை வெளிநாட்டிற்கு தப்பிக்க வைத்தது யார் பாஜக இதில் இருந்து மது வை ஆதரிப்பது மத்திய அரசா மாநில அரசா என்பதை நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள் கனிமொழி கூறியது போல படிபடியாக மது விலக்கு கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கை குறையும் இனிமேல் திமுக வின் அடிமை காங்கிரஸ் என்று கூறினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து எதிர்ப்பு குரல் ஒலிக்கும் அது என் குரலாகதான் முதலாவதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.