ஆன்லைன் கடன் தொல்லையால் சமையல் மாஸ்டர் தற்கொலை
ஆன்லைன் மூலம் கடன் வாங்கி அந்த பணத்தை திரும்பி செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டதால் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-26 05:48 GMT
ஆன்லைன் கடன் தொல்லையால் சமையல் மாஸ்டர் தற்கொலை
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 36). இவர் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் அய்யப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அய்யப்பன் ஆன்லைன் மூலம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அந்த பணத்தை அவரால் திரும்பி செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரது தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.