ஜெயங்கொண்டத்தில் பத்திரப்பதிவு தாமதம்:விவசாயி குடும்பத்துடன் தர்ணா

ஜெயங்கொண்டம் பத்திரபதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவை தாமதப்படுத்துவதாகவும் கூறி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயி தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-18 11:15 GMT

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பருதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த நடராஜன். விவசாயியான இவர் தனது குடும்ப சொத்துகளை உடன் பிறந்தவர்களுக்கு சமமாக பிரித்து கொடுப்பதற்காக நேற்று காலை 10 மணிக்கு பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார். மாலை 5 மணி வரை காத்திருந்த விவசாயி நடராஜன், தாம் எழுதிய பத்திரத்தை சார் பதிவாளரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த நிலையில், சார் பதிவாளர் அதை வாங்கி படிக்காமலேயே பத்திரத்தில் தவறு உள்ளதாக கூறி விவசாயி நடராஜனை வெளியே செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது. நீண்ட நேரம் காத்திருந்த விவசாயி நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்து சார் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் விவசாய நடராஜன் ஈடுபட முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த உறவினர்கள்,

இது தொடர்புடைய மேல் அதிகாரியிடம் தெரிவித்து சார் பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் காரணமாக ஜெயங்கொண்ட பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News