மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பொறுப்பேற்பு
திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக உமா மகேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார்;
Update: 2024-01-09 17:25 GMT
உமாமகேஸ்வரி
திருப்பத்தூர் மாவட்டத்தின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றிய செல்வராசு நாமக்கல் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உமாமகேஸ்வரி இன்று மாலை 5 மணி அளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி பணியிடமாறுதலில் நீலகிரி மாவட்டத்தின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றி வந்தார். தற்போது மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணிமாறுதலில் வந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.