எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவினர்

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பர்கூர் திமுகவை சேர்ந்த சேர்மன், 2 ஊராட்சி மன்ற தலைவர், 9 கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2024-01-08 12:48 GMT

திமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர்

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்த திமுக.,வை சேர்ந்த பர்கூர் ஊராட்சி மன்ற தலைவர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பர்கூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஒன்றிய குழு தலைவர் திருமதி.கவிதா கோவிந்தராஜ் மற்றும் காரகுப்பம் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜன் ஆகியோரின் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமி குமார், கோவிந்தன், சூர்யா, கண்ணப்பன், சகுந்தலா, உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திமுக.,வில் இருந்து விலகி அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி ஆகியோரின் முன்னிலையில் தங்களை அதிமுக.,வில் இணைத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பர்கூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காரக்குப்பம் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜன்.. திமுக.,வில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை எனவும், பர்கூர் தொகுதியில் ஏதேனும் திமுக நிகழ்ச்சி அல்லது பூமி பூஜை நடந்தாலும் பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில் கூட தங்களுக்கு அழைப்பு விடுக்காமல் மாவட்ட செயலாளர் தனிச்சையாக செயல்படுகிறார்.

இதை சுமார் ஒரு வருடமாக பொறுத்து வந்தோம். ஆனால் தொடர்ந்து தாங்கள் புறக்கணிக்கப்படுவதால் திமுகவிலிருந்து விலகி தற்போது அதிமுக.,வில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News