தூத்துக்குடியில் திமுக புதிய உறுப்பினர் உரிமை அட்டை: அமைச்சர் தகவல்
திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 28 - ல் புதிய உறுப்பினர் உரிமை அட்டை வழங்கப்படும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 28 - ல் புதிய உறுப்பினர் உரிமை அட்டை வழங்கப்படும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 2023 πύπύ 3 ம் தேதி முதல் 2023 - ஜூன் 3 - ம் தேதி வரை "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழக பவள விழா ஆண்டு" உறுப்பினர் சேர்த்தல் பணிகளை "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்புடன் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட இலக்கையும் தாண்டி உறுப்பினர்களை சேர்த்து தலைமைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அவ்வாறு தலைமைக் கழத்திற்கு அனுப்பப்பட்ட படிவங்கள் முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டு புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை தலைமைக் கழகம் தயாரித்து மாவட்ட கழகத்திற்கு அனுப்பியுள்ளது.
அதன்படி புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் புதிய உறுப்பினர் அட்டைகளை தாங்கள் உறுப்பினர் கட்டணமாக செலுத்திய ரசீதை காண்பித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் அமைந்துள்ள தூத்துக்குடி கலைஞர் அரங்கில் 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.