மங்கலம் பகுதியில் டிரம்ஸ் வாசித்தும் நாதக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
நாம் தமிழர் கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் திருப்பூர் சுல்தான்பேட்டை மங்கலம் பகுதியில் டிரம்ஸ் வாசித்தும் கட்சி நிர்வாகிகளுடன் நடனமாடியும் ஓட்டு சேகரித்தார்.
நாம் தமிழர் கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் திருப்பூர் சுல்தான்பேட்டை, மங்கலம் பகுதிகளில் டிரம்ஸ் வாசித்தும் கட்சி நிர்வாகிகளுடன் நடனம் ஆடியும் ஓட்டு சேகரித்தார்.
நாம் தமிழர் கட்சியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாமணி, அந்த கட்சியின் மாவட்ட தலைவர் ரத்னா மனோகர் உடன் சென்று திருப்பூர் மங்கலம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மைக் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அவர் மங்கலம் அருகே உள்ள சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள கடைக்காரர்கள், பொதுமக்களிடம் நேரில் சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் சுல்தான் பேட்டையில் டிரம்ஸ் வாசித்தும், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து நடனம் ஆடியும் ஓட்டு சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று வேட்பாளர் கலாமணி உடன் சேர்ந்து உற்சாகமாக ஆடியபடி ஓட்டு சேகரித்தனர்.
இதுகுறித்து பேசிய கலாமணி, நாம் தமிழர் கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் உற்சாகமாக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை நாம் தமிழர் கட்சிக்கு போட்டியில்லை. நாம் தமிழர் கட்சியாகிய நாங்கள் தான் அவருக்கு போட்டி என்றும் தெரிவித்தார்.