பூமி பாதுகாப்பு சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு
கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பூமி பாதுகாப்பு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பூமி பாதுகாப்பு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு அங்குள்ள சங்க ஆடிட்டோரியத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தேர்தல் அலுவலர் ராஜகோபால் தலைமை வகித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவர் ரவீந்தர், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பெர்வின் விஜய், துணைத் தலைவர் கோபிநாதன், துணைச் செயலாளர் தேவதாஸ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை முன்னாள் தலைவர்கள் செல்லதுரை, அர்ஜூணன், சிவசுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் சகரியாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கடந்த 1976-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் நினைவு கூரப்பட்டனர். மேலும் குருந்தன்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தை பல்நோக்கு மருத்துவமனையாக விரிவுபடுத்த அரசை வலியுறுத்துவது. முட்டம், ராஜாக்கமங்கலம் சானல்களில் கடை வரம்பு வரை தண்ணீர் செல்லும் வகையில் தூர் வாரி வழி ஏற்படுத்தி தர அரசை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் எழுத்தர் முத்து நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.