சேலம் கட்டிட மேஸ்திரி அசோசியேஷன் சங்க அவசர கூட்டம்

Update: 2023-11-27 01:58 GMT

கட்டுமான பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்ட கட்டிட மேஸ்திரி அசோசியேஷன் சங்க அவசர கூட்டம் சேலம்-பெங்களூரு பைபாஸ் இந்திரா நகரில் உள்ள அசோசியேஷன் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணி அளவில் நடக்கிறது. கூட்டத்துக்கு அசோசியேஷன் தலைவர் மந்திரி தலைமை தாங்குகிறார். பொருளாளர் கோவிந்தன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் கந்தம்பட்டி சாலையில் விபத்தில் மரணம் அடைந்த அசோசியேஷன் செயலாளர் சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதில் அசோசியேஷன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி சங்க தலைவர் மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News