காலவாக்கம் அருகே புகை மூட்டம் இல்லாத தீயை அணைக்க வலியுறுத்தல்

காலவாக்கம் அருகே புகை மூட்டம் இல்லாத தீயை அணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-04-26 16:20 GMT
புகை மூட்டம் இல்லாத தீயை அணைக்க வலியுறுத்தல்

திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 30,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், காலவாக்கம் ஆறுவழிச்சாலை அருகே உள்ள தற்காலிக குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி, மேற்கண்ட குப்பை கிடங்கில் திடீர் தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த சிறுசேரி தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓரளவிற்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், முறையாக தீயை அணைக்காததால், மீண்டும் அங்கு புகை மூட்டம் காணப்பட்டது. பின், சமூக ஆர்வலர்கள் பேரூராட்சிகள் இயக்குனகரத்திற்கு புகார் தெரிவித்தனர். இ

தையடுத்து, கடந்த 18ம் தேதி தியணைப்பு துறையினர், பேரூராட்சி நிர்வாகம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், அவ்வப்போது குப்பை கிடங்கு பகுதிகளில், ஆங்காங்கே தீ பிடித்து புகைமூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. அதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். நேற்று, பேரூராட்சி ஊழியர்கள் குப்பை கிடங்கு ஒட்டியுள்ள பகிஹாங்காம் கால்வாயில், மோட்டார் வாயிலாக தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பு

கை மூட்டம் இல்லாத வகையில் முழுமையாக தீயை அணைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News