விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு ஆட்சியரிடம் விவசாயிகள் வாக்குவாதம்-தல்லாகுளம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

தீர்ப்பு வெளியானபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை ஏற்றுகொள்ள மறுத்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்

Update: 2023-12-15 08:38 GMT

விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு ஆட்சியரிடம் விவசாயிகள் வாக்குவாதம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருமங்கலம் மற்றும் மேலூர் பகுதியில் உள்ள ஒரு போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகம் இன்று நடைபெற்றது. மேலூர் மற்றும் திருமங்கலம் ஒருபோக விவசாயத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் இப்பகுதி உழவர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பு வருகின்ற செவ்வாய்க்கிழமை வெளியான பிறகு உரிய முடிவெடுக்கப்படும் என ஆட்சியர் சங்கீதா கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து விவசாயிகள் குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய உழவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். அப்போது செய்தியாளரிடம் பேசிய விவசாயிகள் ராமர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர், மேலூர் மற்றும் திருமங்கலம் ஒருபோக பாசனப்பகுதிகளை புறக்கணித்து கள்ளந்திரிபகுதியில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் கடந்த 40 நாட்களாக பெரியாறு-வைகை பாசனத்தின் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் வைகையில் மூன்று முறை அணை நிறைந்து பெருக்கெடுத்து ஓடியும் கூட கடந்த இரண்டு மாதங்களாக எங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

மதுரை மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் திருமங்கலம் மேலூர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறது. மேலூர் பகுதியில் 85 ஆயிரம் ஏக்கரும் திருமங்கலம் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன. 58 ஆம் கால்வாய் திட்டத்தில் பயன் பெறுகின்ற பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் இதில் பாசனம் செய்வதற்கு போதுமான தண்ணீர் இருந்தும் கூட, கடந்த அக்டோபர் மாதமே திறந்து இருக்க வேண்டிய தண்ணீர் இதுவரை வழங்கப்படவில்லை.

அண்மையில் பெய்த மழையால் கூட முல்லைப் பெரியாறு அணையும் வைகை அணையும் நிறைந்து காணப்படுகிறது. இவர்களே உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்து அந்த வழக்கை காரணமாக காண்பித்து தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். தண்ணீர் திறப்பதற்கும் நீதிமன்ற வழக்குக்கும் சம்பந்தமே இல்லை என்ற போதும் கூட மதுரை மாவட்ட நிர்வாகம் உரிய தண்ணீர் வழங்க மறுக்கிறது. வேண்டுமென்றே காலம் கடத்துவதற்காக இந்த செயலை செய்கிறார்கள் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இனியும் எங்கள் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர்.

Tags:    

Similar News