கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி பாசனத்திற்கு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் பங்கீடு செய்து ஆணையிட வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

Update: 2023-12-06 01:38 GMT

தண்ணீர் பங்கீடு செய்ய ஆட்சியர் மனு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கீழ் பவானி பாசனத்தில் இரண்டு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இதில் இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு லட்சத்து 3509 ஏக்கருக்கு ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரையில் 120 நாட்களுக்கும் அடுத்த மண்டலத்திற்கு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை 120 நாட்களில் இடைநிறுத்தம் செய்யப்பட்டு 80 நாட்களுக்கு ஒரு லட்சத்து 3500 ஏக்கர் புன்செய் கடலைப் பயிருக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி கீழ்பவானி ஆயக்கட்டு நிலங்களுக்கு புன்செய் பாசனத்திற்கு சொந்தமான தண்ணீரை தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசத்திற்கு தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக காளிங்கராயன் பாசனத்திற்கும் இதே போல் தண்ணீர் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கீழ்பவானி பாசனத்திற்கு காவிரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி தண்ணீர் பங்கீடு செய்து ஆணை இட வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் . கீழ்பவானி விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் பத்து லட்சம் விவசாயிகளை திரட்டி ஈரோடு சந்திக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News