தமிழகத்தில் பொம்மை ஆட்சி செய்யும் முதலமைச்சர் -முன்னாள் எம்.எல்.ஏ கணேசன்

தமிழக முதலமைச்சர் பொம்மை ஆட்சி செய்வதாக அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கணேசன் தெரிவித்தார்.;

Update: 2023-10-31 07:38 GMT

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தவசி,இருங்கல் ஆகிய கிராமங்களில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் தூசிகே மோகன் தலைமையில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் பங்கேற்று போர்ட் கமிட்டி ஆலோசனைகளை வழங்கினார் கூட்டத்தில் பேசிய போது தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என பேசினர் மேலும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிராமங்களில் சரிபாதி அளவிற்கு கூட வழங்கவில்லை எனவும் மின்கட்டண உயர்வு , சாராய வசூலில் ஐம்பதாயிரம் கோடி மற்றும் ஜிஎஸ்டி வரி வசூல் பத்தாயிரம் கோடி வரி வசூல் செய்யும் தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் திட்டங்களை ரத்து செய்துள்ளது என பேசினர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் குணசீலன், துரை மகேந்திரன், நகர செயலாளர் வெங்கடேசன், அவைத் தலைவர் ஜனார்த்தனன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன்,அருணகிரி ஊராட்சி தலைவர் வெங்கடேசன் இருங்கல் கிருஷ்ணமூர்த்தி, தணிகாசலம் சுரேஷ் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News