இலவச வெளிநாட்டு மொழிப்பயிற்சி : ஆட்சியர் அறிவிப்பு
வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவர்களுக்கு இலவச வெளிநாட்டு மொழிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.;
Update: 2024-05-31 05:07 GMT
மாவட்ட ஆட்சியர் சாந்தி
தமிழகத்தில் முதன் முறையாக வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) ஜெர்மன், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இலவச வெளிநாட்டு மொழிப் பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் விருப்பமுள்ள செவிலியர்கள் இந்த இலவச மொழிப் பயிற்சி திட்டத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக் கனவை நிறைவேற்ற விருப்பம் மற்றும் தகுதியுடையவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மற்றும் லிங்க் பயன்படுத்தி பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். www.omcmanpower.tn.gov.in. இது குறித்து சந்தேங்களுக்கு விளக்கம் பெற கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். Whatsapp Number 6379179200. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி.தெரிவித்துள்ளார்.