ஆலிவலத்தில் கஞ்சா விற்றவர் கைது
ஆலிவலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-23 08:33 GMT
கஞ்சா
திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி உத்தரவின் படி கஞ்சா அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் உழிக்கும் வகையில் தொடர்ந்து தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஆலிவளம் காவல் நிலைய எல்லையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆப்பரக்குடி பேருந்து நிறுத்தம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆப்பரக்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த காளை என்பவரின் மகன் காளிதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா வேறு ஏதேனும் இடங்களில் கஞ்சா பதிக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.