காடாம்புலியூர்: கஞ்சா விற்றவர் கைது
கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-07 12:11 GMT
கஞ்சா விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பாரத் இவர் வீட்டில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வதாக காடாம்புலியூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அங்கு சோதனை செய்த போது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாரத்தை போலீசார் கைது செய்தனர்.