மயிலாடுதுறையில் குப்பை இல்லா ஊராட்சி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறையில் குப்பை இல்லா ஊராட்சி என்ற தலைப்பில் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை எம் எல். ஏ. ராஜகுமார் துவக்கி வைத்தார்
Update: 2024-01-06 11:23 GMT
மயிலாடுதுறையில் தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் , தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி துப்புரவு பணியாளர்கள் நல சங்கம் சார்பில் பொதுமக்கள் சுகாதாரமாக வாழ்ந்திட வேண்டுமென்ற நோக்கில் குப்பை இல்லா ஊராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார். ஏராளமான துப்புரவு பணியாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்கவும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றன ர். முன்னதாக சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை எம்எல்ஏ ராஜகுமாரிடம் வழங்கினர். பேரணியானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.