பாராளுமன்ற பொது தேர்தல் குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு பாராளுமன்ற பொது தேர்தல் 2024 குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-18 08:23 GMT

மனித சங்கிலி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு பாராளுமன்ற பொது தேர்தல் 2024 குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. மகளிர் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தின் உள்ள அனைத்து மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த மனித சங்கிலி நிகழ்வில் மக்கள் 100% வாக்களிக்க வேண்டும் வாக்களிப்பது மக்களின் ஜனநாயக கடமை நிச்சயம் வாக்களிப்பேன் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தினர் இதில் மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மகளிர் திட்ட பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News