மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

கோவில்பட்டியில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-30 10:04 GMT

தற்கொலை 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புது கிராமம் நாராயணகுரு நகரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் மகன் மாரிசெல்வம் (26).

இவர் தினமும் மது குடித்துவிட்டு வருவதாரம். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் மனைவி அவரை விட்டு பிரிந்து தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதில் மனமுடைந்த மாரிசெல்வம் நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News