பருவத மலை உச்சியில் இடிதாங்கி அமைக்கப்படும் - எம்.பி, எம்.எல்.ஏ உறுதி
சோலார் விளக்குகள் வழங்கிய எம்.பி
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பருவதமலை. உச்சியில் எழுந்தருளும் மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மம்பிகை தாயார் கோயில் உள்ளது கோவிலுக்கு திளமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு சி.என்.அண்ணாதுரை, எம்பி மலை உச்சிக்கு சென்று பார்வையிட்டார். அப்பொழுது தனது சொந்த செலவில் 25 சோலார் மின்விளக்குகளை பொருத்து வதற்கு மின்விளக்குகளைவழங்கினார். அதேபோல் இப்பொழுதும் பருவமழை உச்சிக்கு 20 சோலார் மின்விளக்குகளை வழங்கினார். அப்போது சென்ற ஆண்டு நான் பருவதமலை உச்சியில் சென்று பார்வையிட்டபோது போதுமான மின்சார வசதி இல்லாததால் இருளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் அவர்களுக்கு விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொந்த செலவில் சுமார் 40 சோலார் மின் விளக்குகளை பொருத்தி வந்தார். இந்த சோலார் மின்விளக்குகளை விலங்குகள் சேதப்படுத்தி விட்டது. மேலும் 20 சோலார் மின்விளக்குகள் பயங்கர இடி மின்னலால் பழுதடைந்து உள்ளது. மேலும் பழுதடைந்த சோலார் விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பருவதமலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயில் அருகே புதிதாக 25 சோலார் விளக்குகளை பொருத்துவதற்கு அன்பளிப்பாக வழங்கினார். அதேபோல் இப்பொழுதும் மின்விளக்கு வசதி போதுமனதாக பருவதமலை இல்லாததால் உச்சிக்கு 20 சோலார் மின் விளக்குகளை மலை மேல் எடுத்துச் சென்று பொருத்துவதற்கு சி.என். அண்ணாதுரை, எம்பி வழங்கினார். பின்னர் பெ.சு. தி.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் பருவதமலையில் உள்ள அடிவாரம் வரை உள்ள குடிநீர் வசதியை மலை உச்சிக்கு செல்ல தேவையான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு கூடிய விரைவில் குடிநீர் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்தார், தன் தொடர்ச்சியாக குடிநீர் மலை மேல் ஏறுவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகள் செய்து இப்போது குடிநீர் வசதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் பருவதமலை மேலே செல்வதற்கு மாற்றுப்பாதை அமைப்பதற்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது விரைவில் மாற்று பாதை அமைப்பதற்கு முதலமைச்சர் மற்றும் பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் புதிய மாற்று பாதை அமைப்பதற்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பாதை அமைத்துதரப்படும் இந்த பாதை அமைத்துக் கொடுத்தால் பக்தர்கள் பருவதமலை மேலே செல்வதற்கு. சுலபமான வழியாக இருக்கும் அதனால் விரைவில் மாற்று பாதை விரைவில் பாதை அமைத்து தரப்படும் கூறினார்கள் மேலும் பருவதமலை உச்சியில் இடிதாங்கி அமைத்து தரப்படும் அதற்கு உண்டானபணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் இடிதாங்கி அமைத்துக் கொடுக்கப்படும் என்று சி.என்.அண்ணாதுரை, எம்பி ,பெ.க.தி.சரவணன், எம்எல்ஏ ஆகியோர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அ.சிவகுமார், வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, ஒன்றிய கவுன்சிலர் கலையரசி துரை, பஞ்சாயத்து தலைவர் பத்மாவதி பன்னீர்செல்வம், அறங்காவலர் குழு தலைவர் ராமன், மற்றும் அரசு அலுவலர்கள் கோவில் நிர்வாக அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பக்தர்கள் உடன் இருந்தனர்.